Sunday, April 25, 2010

நானும் நீயும்........














அன்று.............
நான் நீயானேன்!

இன்று..............
நீ நீயானதால்!
நீயாகிய நான்...
நான் எனும் என்னை தொலைத்து,
நான் நானவதட்காய்...
நானே என்னை
தேடி அலைகிறேன்.....!!!!!!!!!!

நாளை..........
நானாகிய நானாக,
நானாகாவிட்டால்.......
நீயாகவிருக்கும்.......
நான்,
நானாகிய என்னையும் தொலைத்து!
நீயாகிய என்னையும் தொலைத்து.....
நடுத்தெருவில்........
நாதியற்று கிடப்பதை விட......
நீயாகிய நான்!
இன்றே செத்து மடிகிறேன்.....
நாளை...........
நான் நானாவேன்
என்ற நம்பிக்கையில்!

Saturday, April 24, 2010

நீயும் நானும்..........















தூரத்தில் உனைக்கண்டதுமே
எனக்குள் ஆயிரம் மாற்றங்கள்!
எத்தனை எத்தனை
கற்பனை அலைகள் என்னுடன்
மோதிக்கொண்டிருந்தன!
மெல்ல மெல்ல நீ என்னருகே வந்தபோது.....
பல எதிர்பார்ப்புகளுடன்
உன்னை நான் ஏற்றுக்கொண்டேன்!
என் எதிர்பார்புகளை நீ
நிவர்த்தி செய்வாய் என்ற ஒரு
நப்பாசையில் உன்னை நான்
ஆவலுடன் வருடிக்கொண்டேன்!
ஆனால்...................!!
!!!!!!!!!!!!

என் கற்பனையில் இருந்ததாக நீயில்லை

நான் எதிர்பார்த்ததாக நீயில்லை
மாறாக ஏமாற்றங்களையே நீ தந்தாய்!
ஆனாலும் என்ன செய்வேன் நான்!
எனக்கென்று நீ ஆகிவிட்டாயே!
நீண்ட நேரமாய் உன்னோடு
போராடிப் போராடி இழைத்துவிட்டேன்!
முடியவில்லை என்னால்........
மெல்ல சரிந்து தூங்கிவிட்டேன்.
......................!!!!
!!!!!!!!!!!!!!!!!!!

நிசப்தமாய் இருந்த அந்த சூழலில்

திடீரெனக்கேட்ட ஓர் ஓலி
எனது தூக்கத்தை குலைத்துவிட
திடுக்கிட்டு எழும்பி உன்னை மீண்டும்
வருடினேன்............... ஆனால்
உன்னில் எந்தவிதமான மாற்றமுமில்லை
நீ நீயாகவே இருந்தாய்....
சரி, நானாவது நீயாக மாறி
உனக்குள் ஆழமாக சென்று
உன்னை புரிந்துகொள்ள முற்பட்டவேளை
"stop work........"
பலத்த சத்தமாய் என் காதில் அடிபட
என் மனதில் இடி விழுந்தது போல்
திகைத்துப் போய் சிலையாக நின்றேன்.

கடைசி வரை என் ஞாபகத்தில்

எதுவும் எட்டாததால் உன்னை அப்படியே
வெறுமையாய் திருப்பி கொடுத்துவிட்டேன்!
எனை மன்னித்துவிடு............
எனக்கென்று ஆன என்.................
பரீட்சை வினாத்தாளே !!!!!!!!!!!

எனக்காக நீ!




என் கையிற்குள் அகப்பட்டுக்கொண்டாய்!- நீ

விட்டுவிடுவேனா உன்னை- நான்

என் விரல்களால் உன்னை

மெல்ல வருடிக்கொள்கிறேன்- நீயோ!

என் மனதில் எழும் எண்ணங்களை......

உருப்படுத்திக்கொண்டு இருக்கிறாய்!

எப்போது நீ பயனற்றது ஆகிறாயோ-அன்று

உன்னை தூக்கி வீசிவிடுவேன்

என்பதறியாமல்........

எனக்காக...........
என் கற்பனைகளிட்காக .........
நீ உன்னையே.............

அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறாய்!

இதை சிந்திக்க எனக்கும்
சிறு வருத்தம் தான்.....
என்ன செய்வேன் நான்?

எனை மன்னித்துவிடு,

என் கைவசம் இருக்கும்.........

மைகொண்ட பேனாவே!

தொலைந்து போ!


வேண்டாம் வேண்டாம் என்று

விட்டு விலகினாலும்- எனை

விட்டு விடுவதாய் நீயில்லை.

துரத்தி துரத்தி எனை
பின்தொடர்கிறாயே?
எங்கு நான் சென்றாலும்....

என்பின்னால் அலைகிறாயே?

ஏன்.......? எதற்காக.................?

எனக்கென்று இங்கு
எதுவுமில்லையான பின்பும்.......
எதற்காக என்பின்னே அலைகிறாயோ?

நான் அறியேன்............!


"உன்னைப்போல் நானிருப்பேன்!
உன்னோடு தானிருப்பேன்!
உனக்காக நானிறப்பேன்!
உனக்குள்ளும் கலந்திருப்பேன்!
எனை ஏற்றுக்கொண்டுவிடு.. -உன்
காலடியில் நானிருப்பேன்!"

என்றெல்லாம் என்றெல்லாம்.....

ஆசை வார்த்தைகள் கூறி,

எனையடைந்துவிட முயற்சிக்கிறாயே?

எவ்வளவுதான் நீ முயற்சித்தாலும்...

என்னால் முடியாது........
ஏனெனில்.................
நான்
நிஜங்களையே அதிகம் நேசிக்கிறேன்!
நிழல் நின்னையல்ல...........!

நீ நான் அது.....









உனக்காக தேய்ந்து தேய்ந்து

உன் காலடியில் கிடந்த எனக்கு

நீ காட்டும்............
நன்றிக்கடன் இதுதானா?
நீ எங்கு சென்றாலும்
துணையாக வந்த எனக்கு
நீ செலுத்தும்...........
காணிக்கை இதுதானா?
உனக்கு இன்று நான்..........

தேவையற்றது ஆகிவிட்டதால்

தெருவிலே வீசிவிட்டு செல்கிறாயே?

நீயாகத்தானே எனை தேர்ந்தெடுத்தாய்?

இன்று நீயாகவே விட்டுச்செல்கிறாயே?

ஓ! புதியதைக்கண்டு........

பழையதை வீசியெறிந்தாயோ?

நேற்று புதியது..........
இன்று பழையது..........
தூக்கிவீசிவிட்டாய்!

இன்று புதியது....
நாளை பழையது.......
அதற்கும் நாளை எனது நிலைதானா?

உன் காலடியில்!!
இன்று கிடக்கும்
புதிய
செருப்பை பரிதாபமாய் பார்க்கிறேன்!
தனக்கும் நாளை என் கதியென்று.......

தெரியாமல் சந்தோசக் குதூகலிப்பில்

இன்று அது........!!!!!!!!!!!