
உனக்காக தேய்ந்து தேய்ந்து
உன் காலடியில் கிடந்த எனக்கு
நீ காட்டும்............ நன்றிக்கடன் இதுதானா?
நீ எங்கு சென்றாலும் துணையாக வந்த எனக்கு
நீ செலுத்தும்........... காணிக்கை இதுதானா?
உனக்கு இன்று நான்..........
தேவையற்றது ஆகிவிட்டதால்
தெருவிலே வீசிவிட்டு செல்கிறாயே?
நீயாகத்தானே எனை தேர்ந்தெடுத்தாய்?
இன்று நீயாகவே விட்டுச்செல்கிறாயே?
ஓ! புதியதைக்கண்டு........
பழையதை வீசியெறிந்தாயோ?
நேற்று புதியது.......... இன்று பழையது..........
தூக்கிவீசிவிட்டாய்!
இன்று புதியது.... நாளை பழையது.......
அதற்கும் நாளை எனது நிலைதானா?
உன் காலடியில்!! இன்று கிடக்கும்
புதிய செருப்பை பரிதாபமாய் பார்க்கிறேன்!
தனக்கும் நாளை என் கதியென்று.......
தெரியாமல் சந்தோசக் குதூகலிப்பில்
இன்று அது........!!!!!!!!!!!
No comments:
Post a Comment