
என் கையிற்குள் அகப்பட்டுக்கொண்டாய்!- நீ
விட்டுவிடுவேனா உன்னை- நான்
என் விரல்களால் உன்னை
மெல்ல வருடிக்கொள்கிறேன்- நீயோ!
என் மனதில் எழும் எண்ணங்களை......
உருப்படுத்திக்கொண்டு இருக்கிறாய்!
எப்போது நீ பயனற்றது ஆகிறாயோ-அன்று
உன்னை தூக்கி வீசிவிடுவேன்
என்பதறியாமல்........
எனக்காக........... என் கற்பனைகளிட்காக .........
நீ உன்னையே.............
அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறாய்!
இதை சிந்திக்க எனக்கும் சிறு வருத்தம் தான்.....
என்ன செய்வேன் நான்?
எனை மன்னித்துவிடு,
என் கைவசம் இருக்கும்.........
மைகொண்ட பேனாவே!
No comments:
Post a Comment