
தூரத்தில் உனைக்கண்டதுமே
எனக்குள் ஆயிரம் மாற்றங்கள்!
எத்தனை எத்தனை
கற்பனை அலைகள் என்னுடன்
மோதிக்கொண்டிருந்தன!
மெல்ல மெல்ல நீ என்னருகே வந்தபோது.....
பல எதிர்பார்ப்புகளுடன்
உன்னை நான் ஏற்றுக்கொண்டேன்!
என் எதிர்பார்புகளை நீ
நிவர்த்தி செய்வாய் என்ற ஒரு
நப்பாசையில் உன்னை நான்
ஆவலுடன் வருடிக்கொண்டேன்!
ஆனால்...................!!
என் கற்பனையில் இருந்ததாக நீயில்லை
நான் எதிர்பார்த்ததாக நீயில்லை
மாறாக ஏமாற்றங்களையே நீ தந்தாய்!
ஆனாலும் என்ன செய்வேன் நான்!
எனக்கென்று நீ ஆகிவிட்டாயே!
நீண்ட நேரமாய் உன்னோடு
போராடிப் போராடி இழைத்துவிட்டேன்!
முடியவில்லை என்னால்........
மெல்ல சரிந்து தூங்கிவிட்டேன்.
......................!!!!
நிசப்தமாய் இருந்த அந்த சூழலில்
திடீரெனக்கேட்ட ஓர் ஓலி
எனது தூக்கத்தை குலைத்துவிட
திடுக்கிட்டு எழும்பி உன்னை மீண்டும்
வருடினேன்............... ஆனால்
உன்னில் எந்தவிதமான மாற்றமுமில்லை
நீ நீயாகவே இருந்தாய்....
சரி, நானாவது நீயாக மாறி
உனக்குள் ஆழமாக சென்று
உன்னை புரிந்துகொள்ள முற்பட்டவேளை
"stop work........"
பலத்த சத்தமாய் என் காதில் அடிபட
என் மனதில் இடி விழுந்தது போல்
திகைத்துப் போய் சிலையாக நின்றேன்.
கடைசி வரை என் ஞாபகத்தில்
எதுவும் எட்டாததால் உன்னை அப்படியே
வெறுமையாய் திருப்பி கொடுத்துவிட்டேன்!
எனை மன்னித்துவிடு............
எனக்கென்று ஆன என்.................
பரீட்சை வினாத்தாளே !!!!!!!!!!!
No comments:
Post a Comment